Sunday, February 20, 2011

நோக்கமும் செயலும்

Knowledge is Power என்ற சொலவடை பற்றி பதிவின் நோக்கத்திலேயே குறித்திருக்கிறேன்.

இன்றைய இந்திய,தமிழக வெற்று முழக்க அரசியல் சூழலில் கல்வி சார்ந்த தகுதியும் அறிவும் மட்டுமே சமூக மாற்றத்திற்கான வழி என்று நான் நம்புகிறேன்.

இதற்கான செயல் ஆரம்பக் கல்வியில் இருந்து,நடுநிலைக் கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி ஆகிய அனைத்து தளங்களிலும் துவங்கப்பட வேண்டும்; இத் தளங்களில் உதவி தேவைப்படும் தகுதிமிக்க மாணவர்கள் பலர் இருக்கிறார்கள்.

தகுதியுள்ள,பொருளாதார வசதியற்ற,குடும்பத்தில் கல்வியாளர்கள் இல்லாத குழந்தைகள்,மாணவர்களே தேவைப்படும் பயனாளிகள் என்ற அளவுகோல் மட்டுமே இன்றைய நிலவர உண்மை.

இந்த வகையில் சில தளங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவி செய்வது பொருள் பொதிந்தது என்பதால் அதை சிறு அளவில் துவங்கியிருக்கிறேன்.

இது பெரும் அளவில் வளர வேண்டும் என்பது எனது லட்சிய ஆசைகளில் ஒன்று..இந்தியாவிற்குத் திரும்பித் தொழில்முறையில் தங்கும் போது அந்த ஆசை நிறைவேறும் வண்ணம் பல செயல்களுக்கான திட்ட செயல்முறை இருக்கிறது.

இறை சித்தம் உதவ,இந்தப் பணி ஒரு சமூக இயக்கு விசையாக விரைவில் பெரும் அளவில் வளர வேண்டும் என்பது என் ஆசையும் நம்பிக்கையும் ....